உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரிக்கும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை.!
எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக உள்ள நிலையில், உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் இதற்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 10 சதவீத எண்ணெய் விலை அதிகரிப்பால் 40 புள்ளி உலகளாவிய பணவீக்கம் ஏற்படும் என சர்வதேச நாணய நிதியின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஜப்பான் நிதியமைச்சின் அனுசரணையுடன் நடைபெற்ற கருத்தரங்கிலேயே தெரிவித்துள்ளார். இதற்குத் தயாராக கொள்கை வகுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.