பஹ்ரைனில் ட்ரோன் தாக்குதல் – 32 பேர் படுகாயம்.!
பஹ்ரைனின் சித்ரா பகுதியில் ஈரான் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களில் அறுவை சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நீடித்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.