உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கர்களுக்கான முக்கிய அறிவிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சவுதி அரேபியாவில் பணியாற்றும் அவசியமற்ற அரச ஊழியர்களும், அங்கு உள்ள அனைத்து பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 28ஆம் திகதி முதல் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கட்டாய உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.


சவுதி அரேபியாவை குறிவைத்து ஈரான் மேற்கொள்ளும் தாக்குதல்கள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், அல்-கர்ஜ்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணை விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் தலைநகர், ஒரு விமானத் தளம் மற்றும் ஒரு எண்ணெய் குதம் ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்பட்ட பல ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை தங்கள் பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0