உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்லாமிய குடியரசான ஈரானின் எண்ணெய் வசதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகக் கருதப்படுகிறது.தெஹ்ரான் மற்றும் அருகிலுள்ள கராஜ் நகரத்தில் ஏற்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பெரும் தீப்பிழம்புகளும் அடர்ந்த புகையும் வானில் எழுந்தது காணப்பட்டது.


தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் உள்ள பல எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் தாக்குதலுக்குள்ளானதாக ஈரானின் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தெஹ்ரானில் உள்ள எரிபொருள் சேமிப்பு தளங்கள் மற்றும் எரிசக்தி வளாகங்களை இலக்காகக் கொண்டுதாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவமும் அறிவித்துள்ளது.


அந்த இடங்கள் ஈரானின் ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை பலவீனப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தாக்குதல் என இஸ்ரேல் இராணுவம் விளக்கியுள்ளது.


இதற்கிடையில், சனிக்கிழமை இரவு தெஹ்ரான் முழுவதும் ஏற்பட்ட பல வெடிப்புகள் அங்குள்ள மக்களை அச்சமடையச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் முக்கிய உள்நாட்டு விமான நிலையமான மெஹ்ராபாத் விமான நிலையத்தில் அதிகாலை இடம்பெற்ற தாக்குதலுக்கு பின்னர் இந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விமான நிலையம் மற்றும் எரிபொருள் கிடங்குகளில் ஏற்பட்ட வெடிப்புகளின் அதிர்வுகள் பல மைல்கள் தொலைவில் உள்ள வீடுகளிலும் உணரப்பட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0