ஈரானில் 3,000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தல்.!
கடந்த ஒரு வார காலப்பகுதியில் ஈரானில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
“ஒபரேஷன் எபிக் ஃப்யூரி” எனப்படும் இராணுவ நடவடிக்கையின் முதல் வாரத்தில், அமெரிக்கப் படைகள் 3,000க்கும் அதிகமான இலக்குகளைத் தாக்கியுள்ளதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளில் அமெரிக்கப் படைகள் தங்களது தாக்குதல் வேகத்தை குறைக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.