உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சவூதி-பாகிஸ்தான் இராணுவ ஒத்துழைப்பு – ஈரானின் தாக்குதல்கள் குறித்து ஆலோசனை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
67 பார்வைகள்

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் இன்று (07) தலைநகர் ரியாத்தில் பாகிஸ்தானின் இராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் உடன் நேரில் சந்தித்து, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலாக, ஈரான் கடற்படை மற்றும் நிலைத் தளங்களின் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், மற்றும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இதில்ப் பேச்சின் முக்கிய அம்சமாக இருந்தது.


அரசாங்க ஊடகங்கள் வெளியிட்ட தகவலின் படி, இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சவூதி மீதான தாக்குதல் பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து அணுகப்படும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் சவூதி-பாகிஸ்தான்இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி, இருநாடுகளில் ஒன்றின் மீது ஏற்படும் தாக்குதல் மற்றொன்றின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.இதற்கிடையில், பாகிஸ்தான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0