உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் போர் பதற்றம்: பாகிஸ்தானில் எரிபொருள் விலை சுமார் 20 சதவீதம் உயர்வு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.பாகிஸ்தான் பெட்ரோலிய வள அமைச்சர் அலி பர்வேஸ் மாலிக் வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டின் வரலாற்றில் பதிவான முக்கிய விலை உயர்வாக, ஒரு லீற்றர் எரிபொருள் 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, ஒரு லீற்றர் பெட்ரோல் 335.86 பாகிஸ்தான் ரூபாவாகவும், டீசல் 321.17 பாகிஸ்தான் ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனவும், அது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


விலை அறிவிப்புக்கு முன்னரே லாகூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் எரிபொருள் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எரிபொருள்பதுக்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.


இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியப் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று ஒப்பிடுகையில் சுமார் 9 சதவீதம் உயர்ந்து, 93 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0