உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கில் பதற்றம்: அல்-அக்ஸா மசூதியில் வழிபாட்டுக்கு தடை!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் நேற்று (06) நடைபெறவிருந்த ஜும்மா தொழுகைக்கு இஸ்ரேல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.ஈரான் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அல்-அக்ஸா பள்ளிவாசல் மட்டுமன்றி, பழைய ஜெருசலேம் நகரில் உள்ள மேற்கு சுவர் மற்றும் திருக்கல்லறை தேவாலயம் உள்ளிட்ட அனைத்து புனித தலங்களும் நேற்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான போர் சூழல் நிலவி வரும் நிலையில், குடியிருப்பாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களைத் தவிர மற்றவர்கள் பழைய ஜெருசலேம் நகருக்குள் நுழைவதற்கும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை அல்-அக்ஸா பள்ளிவாசலின் மூத்த இமாம் ஷேக் இக்ரிமா சப்ரி கடுமையாக கண்டித்துள்ளார். எந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி பள்ளிவாசலை மூடுவது முற்றிலும் நியாயமற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.


சுமார் ஐந்து இலட்சம் பேர் வரை தொழுகை நடத்தக்கூடிய அல்-அக்ஸா வளாகத்தில் ரமழான் தொடக்கத்தில் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0