இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநாட்ட இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, வெனிசுலாவில் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், அரசியல் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும் என அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மீளக் கட்டியெழுந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அரசாங்கமும் அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் அமைப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டு மூடப்பட்டிருந்த கராகஸ் நகரிலுள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும், வாஷிங்டன் புதிய தூதரை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.