உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவுடன் வர்த்தகத்தில் சீனாவைப் போல தவறு செய்யமாட்டோம் – அமெரிக்கா.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
45 பார்வைகள்

வர்த்தக உறவில் சீனாவுடன் ஏற்பட்ட தவறுகளை இந்தியாவுடன் செய்யமாட்டோம் என்று அமெரிக்க துணை வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டாவ் தெரிவித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:


கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் சீனாவுடன் மேற்கொண்ட வர்த்தக உறவிலிருந்து பல பாடங்களை அமெரிக்கா கற்றுக்கொண்டுள்ளது. எனவே, அந்த அனுபவங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இறுதி செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக தெளிவுடன் செயல்படுவோம். அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதோடு, இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.

அனைத்து சந்தைகளையும் மேம்படுத்த நாங்கள் ஆதரவளிப்போம். பல வர்த்தக துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதை காண்கிறோம். “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கை, அமெரிக்கா மட்டும் என்ற அர்த்தம் அல்ல; பிற நாடுகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும்.


பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை மேம்படுத்த விரும்புவது போல, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை முன்னேற்ற விரும்புகிறார். இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவின் எழுச்சியுடன் தொடர்புடையது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கும்.எங்கள் நாட்டின் நலன்களை முன்னிட்டு நான் இங்கு வந்துள்ளேன். நமது கூட்டாண்மையை வலுப்படுத்துவது இந்தியாவுக்கும் நன்மை பயக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0