உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா முப்பது நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உலகளவில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


இந்த சூழலில், உலக சந்தையில் நிலவும் எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இந்த அனுமதி அடுத்த முப்பது நாட்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடல் வழி எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதையும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தையும் கருத்தில் கொண்டு இந்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக அமெரிக்க நிதித் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0