ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்.!
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலால் தூதரகக் கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி சேதமடைந்து இடிந்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு வளாகத்தின் உட்பகுதி அடர்ந்த புகையால் சூழப்பட்டது.
சேதம் ஏற்பட்டிருந்தாலும், தூதரக ஊழியர்கள் எவரும் வெளியேற்றப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் வளாகத்துக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தாக்குதலின் இலக்கு, வளாகத்தில் இயங்கும் மத்திய புலனாய்வு முகவரகம் தொடர்புடைய ஒரு மையமாக இருக்கலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.இந்தச் சம்பவம் தொடர்பானமேலதிக தகவல்களை வெளிநாட்டு ஊடக நிறுவனம் ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.