ஈரானில் 787 பேர் உயிரிழப்பு.!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும், நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 504 இடங்கள் நேரடி தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மொத்தமாக 1,039 தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.