உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தான் இராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தீவிர தாக்குதல் – எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
42 பார்வைகள்

நூர் கான் விமானப்படைத் தளம் உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய இராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் படைகள் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.


தெஹ்ரிக் இ தலிபான் மற்றும் பலுச் விடுதலைப் படை போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் ஆதரவு வழங்குவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.


இதன் பின்னணியில், கடந்த மாதம் 27ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேரடி போர் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதிலிருந்து இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த மோதல்களில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் ஆப்கானிஸ்தான் படைகள் எல்லைப் பகுதிகளில் தீவிரமாக எதிர்த்து போராடி வருகின்றன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தலிபான் ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் எல்லைப் பகுதிகளில் தலிபான் படைகள் முன்னேற்றம் காண்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இரு நாடுகளின் எல்லையை வரையறுக்கும் கோட்டை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும் தலிபான் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் நூர் கான் விமானப்படைத் தளம், பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள இராணுவ தளம், கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் முகமது பகுதியில் உள்ள இராணுவ நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நூர் கான் விமானப்படைத் தளம் மீண்டும் சேதமடைந்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் நிலைமையை கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் கவனம் இப்பகுதியில் திரும்பியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

86 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

83 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0