ரியாத் அமெரிக்கத் தூதரகத்தின் மீது இன்று ட்ரோன் தாக்குதல்.!
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் வளாகத்தில் இன்று (03) அதிகாலை பலத்த வெடிச்சத்தம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்காகக் கொண்டு இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து தூதரக வளாகத்தில் கரும்புகை பரவியதுடன் தீப்பற்றும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அங்கு இருந்தவர்கள் இரண்டு முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஏற்பட்ட தீ விபத்து விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இச்சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலையை மேலும் அதிகரித்துள்ளது.