ஈரானுக்கு ஆதரவு அளிக்கிறோம்” – சீனா அறிவிப்பு.!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்துவருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு சீனா ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்துவருகிறது
. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உயர் தலைவர் கொமெய்னி கொல்லப்பட்ட நிலையில், ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தைத் தாக்கி அழித்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி ட்ரோன்களை ஏவி தாக்கிக்கொள்ளும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் டுபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபா அருகே ஈரான் ஏவுகணையை வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.