உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கில் பதற்றம் – எண்ணெய் விலை உயர்வு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய கிழக்கில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.


உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20 வீதம் இப்பகுதி வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில், இந்த ஜலசந்தி வழியாக கப்பல்கள் பயணிக்க வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ஜலசந்தி நுழைவாயிலில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீடித்த மோதல் ஏற்பட்டால் எரிசக்தி விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். திங்கட்கிழமை ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 10 வீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன. பின்னர் காலையில் அந்த உயர்வு குறைந்தது.
இன்று காலை கிரீன்விச் நேரப்படி 02.00 மணியளவில், பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 4 வீதத்திற்கும் அதிகமாக 76.16 அமெரிக்க டொலராக இருந்தது. அதேவேளை, அமெரிக்க மசகு எண்ணெய் விலை சுமார் 4 வீதம் உயர்ந்து 69.67 அமெரிக்க டொலராக பதிவானது.


“சந்தை பீதியடைந்த நிலை இல்லை” என எம்எஸ்டி மார்க்யூ நிறுவனத்தின் எரிசக்தி ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் சவுல் கவோனிக் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து மீண்டும் சீரடையும் அறிகுறிகளை சந்தை ஆய்வாளர்கள் கவனித்து வருகின்றனர். இதனால் எண்ணெய் விலைகள் மீண்டும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், மோதல் நீடித்தால்எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலரை கடந்துசெல்லக்கூடும் என சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இதேவேளை, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒபெக்+ குழு (சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய அமைப்பு) விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளொன்றுக்கு 206,000 பீப்பாய்கள் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0