உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆயுதங்களை கீழே வைத்து சரணடையுங்கள்: ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
40 பார்வைகள்

ஈரான் இராணுவம், புரட்சிகர காவல் படை மற்றும் பொலிஸார் ஆகியோர் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் 48 முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இராணுவத் தலைமை முழுமையாக செயலிழந்துவிட்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
“ஈரான் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.

அமெரிக்க மக்களை அணு ஆயுத அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த பலதசாப்தங்களாக அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் இனி தொடராது,” என அவர் தெரிவித்தார்.
ஈரான் மக்களை நோக்கியும் அவர் கருத்து வெளியிட்டு, நாட்டின் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். கடந்த சில நாட்களில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து நூற்றுக்கணக்கான இலக்குகளை தாக்கியுள்ளதாகவும், தாக்குதல் நடவடிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அடையப்படும் வரை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0