தெஹ்ரானில் ஐஆர்ஜிசி தலைமையகம் அழிக்கப்பட்டது: “பாம்பின் தலை வெட்டப்பட்டது” என அமெரிக்க இராணுவம் அறிவிப்பு.!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமையகத்தை அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதனை “பாம்பின் தலை வெட்டப்பட்டது” என அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய தலைவர்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்தான், குவைத், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றை இலக்குவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பல தசாப்தங்களில் ஐஆர்ஜிசி அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அண்மைய தாக்குதலில் அதன் தலைமையகம் அழிக்கப்பட்டதன் மூலம் அமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்கள் தொடரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.