உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லெபனானில் உள்ள மக்களை நகரங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

லெபனான் நாட்டில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. வெளியேறும் மக்கள், குறித்த நகர எல்லைகளில் இருந்து குறைந்தது ஆயிரம் மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களும், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இதற்கு பதிலடி நடவடிக்கையாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் நோக்கி ஏவுகணை மற்றும் ஆளில்லா வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூத் நகரின் தெற்கு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து இஸ்ரேல் தரப்பு தெரிவித்ததாவது: தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.லெபனானில் நிலவும் இந்தப் போர் சூழ்நிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0