உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
59 பார்வைகள்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக 67 வயதுடைய அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத் தலைவர் ஒருவர் பதவியில் இல்லாதபோது அல்லது அவர் காலமானால், புதிய தலைவர் ஒருவரை நிபுணர்கள் பேரவை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு தற்காலிக தலைமைப் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் அலிரேசா அராஃபி இந்தப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஷியா கொள்கைவாதியான அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் செல்வாக்குமிக்க மத மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். அவர் தற்போது ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாவலர் சபையின் உறுப்பினர், ஈரானிய மதக் கல்விக்கூடங்களின் தலைவர் மற்றும் நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அலி காமேனியின் மறைவு ஈரானுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில், நாட்டின் நிர்வாகம் மற்றும் இராணுவக் கட்டமைப்பைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அலிரேசா அராஃபியின் நியமனம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் நிபுணர்கள் பேரவை விரைவில் கூடி, நிரந்தரமான ஒரு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அலிரேசா அராஃபி நாட்டின் உயரிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார்.

இடைக்காலத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டாலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் உள்ளடங்கிய தற்காலிக சபையுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0