உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி கைது.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
48 பார்வைகள்

அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியும், F-35 போர் விமான ஓட்டுநராக பணியாற்றியவருமான ஜெரால்ட் எடி ப்ரவுன் ஜூனியர் (65) இந்தியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சீன இராணுவ விமான ஓட்டுநர்களுக்கு அனுமதியின்றி பயிற்சி அளித்ததாக அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி, சீன விமானப்படை ஓட்டுநர்களுக்கு போர் விமான பயிற்சி வழங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவர் சீன அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி திட்டங்களில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், 2023 டிசம்பர் மாதத்தில் சீனாவுக்குச் சென்று பல நாட்கள் அங்குள்ள விமான ஓட்டுநர்களுடன் கலந்துரையாடி, அமெரிக்க விமானப்படை தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைப்பினர் இது தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவத்தில் நீண்டகால அனுபவம் பெற்ற ஒருவர் எதிரி நாடு எனக் கருதப்படும் தரப்புக்கு பயிற்சி வழங்கியிருப்பது மிகவும் கடுமையான குற்றமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ப்ரவுன் 24 ஆண்டுகள் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். பல நவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட அவர் மீது சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0