உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எப்ஸ்டீன் வழக்கு: கிளின்டன் தம்பதியினர் நாடாளுமன்றக் குழுவில் சாட்சி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
46 பார்வைகள்

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


நேற்று (26.02.2026) ஹிலாரி கிளின்டன் முன்னிலையாகிய நிலையில், இன்று (27.02.2026) பில் கிளின்டனும் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளார். நீண்டகாலமாக இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கிளின்டன் தம்பதியினர், நாடாளுமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க் மாநிலத்தின் சப்பாகுவா பகுதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. பில் கிளின்டன் கடந்த காலங்களில் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்ட போதிலும், அவரது சட்டவிரோதச் செயல்கள் குறித்து தமக்குத் தெரியாது என மறுத்துள்ளார். அதேபோன்று, ஹிலாரி கிளின்டனும் தமக்கு எப்ஸ்டீனை தனிப்பட்ட முறையில் அறிமுகம் இல்லை என தெரிவித்துள்ளார்.


இந்த விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கிளின்டன் தம்பதியினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், “யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல” என்பதை உறுதி செய்யவே இவ்விசாரணை நடத்தப்படுவதாகக் குழுத் தலைவர் ஜேம்ஸ் கோமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு ஜெரால்ட் ஃபோர்டு முன்னிலையாகியதற்குப் பின்னர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியமளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0