உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் நகரங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனைத் தொடர்ந்து, தாங்கள் தற்போது ஆப்கானிஸ்தானுடன் “நேரடிப் போரில்” ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வந்ததாகவும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.

காபூல் மற்றும் கந்தகாரில் உள்ள தாலிபான் நிர்வாகத்தின் பாதுகாப்பு நிலைகளை இலக்கு வைத்து போர் விமானங்கள் குண்டுவீசியதாக கூறப்படுகிறது.சர்வதேச நாடுகள் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளும் போருக்குத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுவதால் தெற்காசியப் பிராந்தியத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0