உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐந்து மாதக் குழந்தையை குலுக்கிக் கொ*லை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
52 பார்வைகள்

வேல்ஸின் சுவான்சி பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் என்ற தாய், 2024 மார்ச் மாதம் தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை தனது காதலன் தோமஸ் மோர்கனிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார்.அந்த நேரத்தில் கோபத்தின் பேரில் மோர்கன் குழந்தையை கடுமையாகக் குலுக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதன் விளைவாக குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு மற்றும் கண்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தது.குழந்தையை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள், தாங்கள் இதுவரை கண்டவற்றில் மிகவும் கடுமையான காயங்கள் இவை என நீதிமன்றத்தில் சாட்சி அளித்தனர்.

மூளையில் ஏற்பட்ட சேதம் காரணமாக குழந்தை உடனடியாக சுயநினைவை இழந்திருக்கலாம் என்றும், இது தற்செயலான சம்பவமோ அல்லது விளையாட்டாக நிகழ்ந்ததோ அல்ல; திட்டமிட்ட மற்றும் கொடூரமான தாக்குதல் என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.
29 வயதுடைய தோமஸ் மோர்கன், கடந்த 15 மாதங்களாகத் தன்னை நிரபராதி என வாதிட்டு வந்தார்.

குழந்தை வாந்தி எடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதைத் தடுக்க முயன்றபோதே இச்சம்பவம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். குழந்தையின் இறுதிச்சடங்கிலும் அவர் கலந்து கொண்டிருந்தார். எனினும், 2025 ஜூலை மாதம் விரிவான மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.


சுவான்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் இறுதியில்மோர்கன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறைந்தது 19 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0