உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மத்திய கிழக்கு பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா – ஈரான் மறைமுகப் பேச்சுவார்த்தை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தவிர்க்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளனர்.ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளதால், இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீது நடத்தப்பட்ட படையெடுப்பிற்குப் பின்னர், தற்போதுதான் அமெரிக்கா தனது மிகப்பெரிய இராணுவப் பலத்தை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்பட பெரும் கடற்படை அணிவகுப்பும் ஆயிரக்கணக்கான துருப்புகளும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.மறுபுறம், தாக்குதல் நடத்தப்பட்டால் தகுந்த பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், போர் ஏற்படுவதைத் தடுக்கும் கடைசி முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை பார்க்கப்படுகிறது.அண்மைய உரையில், டொனால்ட் ட்ரம்ப், ஈரான் பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது என்றும், அது அணு ஆயுதம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தனது நாட்டில் யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கையை நிறுத்த முடியாது என ஈரான் மறுத்துள்ளதுடன், அணுசக்தித் திட்டம் தொடர்பில் சில தளர்வுகளை வழங்கத் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில், ஈரானிய தரப்பிற்கு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமை தாங்குகிறார்.

அமெரிக்கத் தரப்பில் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அந்நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ள தடைகளை நீக்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0