உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மின்னணு காப்பு விதிக்கப்பட்டால் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் – மரின் லூ பென்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
52 பார்வைகள்

2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மின்னணு கண்காணிப்பு காப்பு அணிய வேண்டிய தண்டனை விதிக்கப்பட்டால் தாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமாட்டேன் என பிரான்ஸ் அரசியல் தலைவி மரின் லூ பென் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கட்டுப்பாடுகளுடன் வாக்காளர்களை நேரில் சந்தித்தலும், பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதும் சாத்தியமில்லை; அது தன்னை வேட்பாளராக நிற்பதை மறைமுகமாகத் தடுக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.


ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள் தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி வெளியாக உள்ளது. தாம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், கட்சித் தலைவர் ஜோர்டான் பார்டெல்லா வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்மீது எந்தவித கட்டுப்பாடு அல்லது மேற்பார்வை பொறுப்பையும் தாம் ஏற்கமாட்டேன் என்றும், தேவையானபோதுஆலோசனை வழங்குவேன் என்றும் லூ பென் குறிப்பிட்டுள்ளார்.மேலும், 2027 ஆம் ஆண்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தாம் அரசில் இணையமாட்டேன் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

84 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

82 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

91 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

28 0 0