அதிகரிக்கும் வெப்பத்தை கட்டுப்படுத்த ‘செயற்கை காடு’ திட்டம்: அரபு நாடுகளின் புதிய முயற்சி.!
சுட்டெரிக்கும் மணல் பரப்புகளின் நடுவே பிரம்மாண்டமான கான்கிரீட் நகரங்களை உருவாக்கி உலகை ஆச்சரியப்படுத்திய அரபு நாடுகள், தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து, உலகின் பல பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மரங்களை இறக்குமதி செய்து, செயற்கை காடுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நகர்ப்புற வெப்பத்தை குறைத்து, சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.வளைகுடா நாடுகளில் நகரங்கள் வேகமாக வளர்ந்ததன் விளைவாக, கண்ணாடிக் கோபுரங்களும் தார்ச் சாலைகளும் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இவை வெப்பத்தை உறிஞ்சி, நகரங்களை நகர்ப்புற வெப்பத் தீவுகளாக மாற்றியுள்ளன.
இதனால் கோடை காலங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதும் கடினமாகி வருகிறது.இந்த சூழ்நிலையில், மரங்கள் நிறைந்த பசுமைப் பகுதிகளை உருவாக்குவது வெப்பத்தை குறைக்கும் முக்கிய தீர்வாக கருதப்படுகிறது.