உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்க வரி விவகாரம்: பத்து சதவீத சுங்கவரி 15 ஆக உயர வாய்ப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்திருந்தார். அதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டதுடன், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.
இந்த வரி நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.


இதனைத் தொடர்ந்து, வேறு சட்டப்பிரிவின் கீழ் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு 10 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் என ட்ரம்ப் கடந்த 20ஆம் திகதி அறிவித்தார்.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரி, 1974ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122இன் கீழ், 150 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே இது நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

79 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

77 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0