ஈரான் தாக்குதல் குறித்த தகவல்: ட்ரம்ப் திட்டவட்ட மறுப்பு.!
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுடன் போருக்கு செல்வதை ஜெனரல் கெய்ன் எதிர்க்கிறார் என பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் யாருக்கும் விருப்பமானதல்ல என்றாலும், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் என்பதே ஜெனரலின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.மேலும், ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த விருப்பம் இருப்பதாகவும், அது நடைபெறாவிட்டால் அந்த நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ஒரு அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட செய்தியில், வெடிமருந்து பற்றாக்குறை மற்றும் கூட்டணி நாடுகளின் ஆதரவு இல்லாமை போன்ற காரணங்கள் இராணுவத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என ஜெனரல் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த தகவல் உண்மையல்ல என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.