உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சுரங்க அகழ்வு, கனிமங்களுக்காக இந்தியா – பிரேசில் ஒப்பந்தம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
83 பார்வைகள்

உலகளாவிய ரீதியில் நிலவும் மூலப்பொருட்களுக்கான போட்டி சூழலில், சுரங்க அகழ்வு மற்றும் கனிமத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரேசிலும் கைச்சாத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 பில்லியன் டொலர் வர்த்தக இலக்கை அடைவது என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரேசில் ஜனாதிபதி புதுடில்லிக்கு பயணம் செய்திருந்த போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.அறிக்கையின்படி, உலகின் முன்னணி இரும்புத் தாது உற்பத்தியாளர்களில் பிரேசில் ஒன்றாகும். உருக்கு உற்பத்திக்குத் தேவையான முக்கிய கனிமங்களின் பெரும் இருப்பு அந்நாட்டில் உள்ளது.

அதிகரித்து வரும் உள்நாட்டு உருக்கு தேவையை பூர்த்தி செய்வதற்கும், நீண்டகால மூலப்பொருள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஒத்துழைப்பு மூலம் ஆய்வு, சுரங்க அகழ்வு மற்றும் உருக்கு துறை உட்கட்டமைப்பில் முதலீட்டை ஈர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

79 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

77 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0