உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கையில் தசாப்த காலங்களாக அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு’ எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் நேற்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கையொப்பத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
“பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்கவும், இளைஞர்களைக் காரணமின்றி சிறையிலடைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கறுப்புச் சட்டமாகும். இப்போது அதற்குப் பதிலாக அதைவிட மோசமான ‘அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ என்ற பெயரில் புதிய அடக்குமுறைச் சட்டத்தை திணிக்க அரசு முயல்கின்றது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” – என்றார்.

இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நசுக்க இச்சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

போராட்டத்தின் இறுதியில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய ஆவணங்கள், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0