உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 15.02.2026 இன்று சிவராத்திரி பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றன.

குறித்த பூசை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

குறிப்பாக கடந்த காலங்களில் வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாடுகளில் பொலிஸாரால் கடுமையான குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படாது சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும், சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 13.02.2026 அன்று இடம்பெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். அதன்போது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுமென வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்திலே சுமூகமாகவும் சிறப்பாகவும் சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில் வெடுக்குநாறிமலை உச்சியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூசை வழிபாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அங்கு சிவராத்திரி தின கலை நிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

மேலும் குறித்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் செவ்வதற்கான வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் இடம்பெறும் சிவராத்திரி வழிபாடுகளுக்கு பக்தர்கள் சென்று வருவதற்காக ஆலய நிர்வாகத்தினரால் உழவியந்திரங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் பெருத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான பக்தர்கள் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்ததுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான செல்வராசா சுசீலன், தர்மலிங்கம் சுசீலன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் செயலாளர் ச.தவேந்திரராசா, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பூபாலசிங்கம், செயலாளர் ச.வசந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஆலயத்திற்குச் செல்லும் பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தமையால் பக்தர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கிய உழவியந்திரங்கள் புதையுண்டதுடன், ஆலயத்திற்கு குடிநீர் தாங்கியை எடுத்து வந்த உழவியந்திரமும் புதையுண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து தடங்கலும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்வதற்கான வீதிச் சீரமைப்புத் தொடர்பில் எதிர்காலத்தில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஆலயத்திற்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வீதியானது வனவளத் திணைக்களத்தினுடைய பகுதிகளை ஊடறுத்துச் செல்வதால் வனவளத் திணைக்களத்தின் அனுமதிகள் பெறவேண்டியிருப்பதாகவும், அதற்கமைய அனுமதிகளைப் பெற்று வீதியை சீரமைப்பது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.

மேலும் குறித்த சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறும்போது வெடுக்குநாறிமலை ஆலயச் சூழலில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0