உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலுக்கு பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில் புயலுக்கு பின்னர் அவர்களின் வருகை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது வடமாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் என்.எம் ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழன் (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் தொடக்கம் தெற்கு பகுதியாக இருக்கின்ற சௌத்பார், வங்காலை, சிலாபத்துறை, முள்ளிக்குளம் ஆகிய கடற்பகுதிகளுக்கு தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை அதிகரித்துள்ளது.

இந்திய மீனவர்கள் தொடர்பாக நாங்கள் அரசுக்கு பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தினாலும், அரசாங்கம் குறித்த விடயத்தை கண்டு கொள்வதாக இல்லை.

டித்வா புயலுக்கு பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில், புயலின் பின்னர் அவர்களின் வருகை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல், குறித்த விடயத்தை கண்டு கொள்ளாமல் அசமந்தமாக இருக்கிறது.

வடபகுதியில் தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அண்மையில் தபாலட்டைகள் ஊடாக ஜனாதிபதிக்கும், கடற்றொழில் அமைச்சருக்கும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். எமது மீனவர்கள் தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறித்த தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்தோம்.

தடை செய்யப்பட மீன்பிடி நடவடிக்கைகளினால் சிறு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கரைவலை தொழிலும் பாதிக்கப்படுகின்றது. கடல் சூழலும் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக உள்ளூர் இழுவை படகு தொழில், டைனமைட், சுருக்கு வலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளையும் நாங்கள் சுட்டிக்காட்டினோம். ஆனால் மீனவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த கூடிய கிராம மட்ட ரீதியில் மீனவர்களுக்கும் எமக்கும் உள்ள உறவை துண்டிக்கும் வகையில், அரசாங்கம் குறித்த தொழிலை மாத்திரம் நிறுத்த முடிவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட உறுப்பினர் அன்ரனி சங்கர், சிலாவத்துறை கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் முஹமட் அனாப்தீன் ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0