உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்துக.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில கிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் இவ்வாறான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மால் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது உறுதியளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கிடையில் 11.02.2025 நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 27.01.2026 அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலைஞர்மடத்தில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு தம்மால் வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக அங்கு தற்போது கசிப்பு உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வெள்ளைப்பள்ளம் கிராமத்திலும், முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் கள்ளப்பாடு தெற்கு மற்றும் செம்லைக் கிராமங்களிலும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தம்மிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், குறித்த கிராமங்களில் இடம்பெறும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த பகுதிகளில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்த தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0