உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (11) காலை 11 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் சிவசம்பு ராமகிருஷ்ணன் கலந்து கொண்டதோடு எதிர்வரும் மகா சிவராத்திரி விழாவிற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கடந்த வருடங்களை போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக போக்குவரத்து ஒழுங்குகள், சுகாதாரம், மின்சாரம், நீர் விநியோகம், உணவு, பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் உள்ளடங்களாக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள், இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள், அரச தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0