உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மாட்டிறைச்சியை நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
16 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (10) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களிலும், நிர்ணய விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய இன்றைய தினம் திங்கட்கிழமை (9) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியின் நிர்ணய விலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (9) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) உதவி மாவட்ட செயலாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், வருமான வரி பரிசோதகர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாட்டிறைச்சி குத்தகை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபை பிரிவுகளிலும் நாளை செவ்வாய்க்கிழமை (10) முதல் மாட்டிறைச்சியை நிர்ணய விலையில் விற்பனை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக 1 கிலோ தனி இறைச்சி 2200 ரூபாய்க்கும் , 1 கிலோ முள் இறைச்சி 2000 ரூபாய்க்கும் அதில் (200 கிராம் முள்ளும் 800 கிராம் இறைச்சியும்), 1 கிலோ தனி முள்ளு 1200 ரூபாய்க்கும், 1 கிலோ ஈரல் 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்வதற்கு மாவட்ட செயலாளர், தவிசாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களின் முன்னிலையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வுக்கு கொண்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0