உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வீரர்களுக்கு வரவேற்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 2ஆம் இடத்தை பெற்ற நிலையில் குறித்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (9) காலை இடம்பெற்றது.

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைபந்தாட்ட இறுதி போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹுசேனியா அணிகள் மோதிய போட்டியில் ஹமீட் அல் ஹுசேனியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .

இப்போட்டியில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று
வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.

இவ் விளையாட்டு வீரர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு தலைமையில் குறித்த வீரர்கள் மாலை அனுவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த வீரர்கள் ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0