உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு -உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மேற்கு வங்காளத்தில் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கொடிய நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

இதனால், எந்தவொரு வர்த்தக அல்லது பயண கட்டுப்பாடுகளையும் பரிந்துரைக்கவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு அறிக்கையல் உறுதிபடுத்தியது.ஹொங்கொங், தாய்லாந்து, தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகள் நிபா வைரஸ் தொற்றுகள் குறித்த அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக கொவிட் பாணி சுகாதார பரிசோதனை நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் இந்த மாதம் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் இந்தியாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.நோயாளிகள் இருவரும் 25 வயது தாதியர்கள் ஆவர்.ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் தாதியர்களான அவர்கள் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் உள்ள ஒரே தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்.

2025 டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் தோன்றின, அது விரைவாக நரம்பியல் சிக்கல்களாக மாற்றமடைந்து 2026 ஜனவரி தொடக்கத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பின்னர் ஜனவரி 13 ஆம் திகதி புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தால் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.ஜனவரி 21 ஆம் திகதி நிலவரப்படி, ஆண் நோயாளி குணமடைந்து வருவதாகவும், பெண் நோயாளி இன்னும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை மேலும் கூறியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

58 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு…

61 0 0