டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வைப்பு.!
வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர தலைமையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது சுய தொழில்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான நிதியுதவி நேற்று (29) மாலை வழங்கப்பட்டது.
இதன்போது கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான உபாலி சமரசிங்க கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வில் 66 தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிக்குளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






