கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல்.!
தற்போது பெரும் பேசுபொருளாகியிருக்கும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நேற்று (26.01.2026) வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
வவுனியா குருமன்காட்டிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் வவுனியாவை சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



