உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக மன்னார் சாந்திபுரத்தில் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மையத்தினுடாக 123 ஆவது வீடு மன்னார் சாந்திபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நிலையில், குறித்த வீடு இன்றைய தினம் திங்கட்கிழமை (26) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த வருடம் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்று தீ அனர்த்தத்தில் முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியது.

குறித்த குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்றீடாக புதிய வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் மக்கள் நல்வாழ்வு மையத்தினால் கடந்த வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு வீடு அமைக்கும் பணிகள் இடம்பெற்றது.

அமைக்கப்பட்ட குறித்த வீடு இன்றைய தினம் திங்கட்கிழமை (26) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 123 ஆவது வீடாக அமைக்கப்பட்ட குறித்த வீடு இன்றைய தினம் திங்கட்கிழமை (26) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மையத்தின் தலைவர், பிரதி நிதிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீட்டை பயனாளியிடம் கையளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0