உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அநுரவின் ஆட்சி தோல்வியில்; இது எதிரணிகள் எழும் நேரம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

“அநுரவின் ஆட்சியின் கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாகச் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டுக் கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவில்லை.

சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே அவர் செயற்பட்டார்.

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரமேஷ் பத்திரன,
“நான் மீண்டும் அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளேன். தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக வாங்கு வங்கி உள்ள மாவட்டம்தான் காலி மாவட்டம். அங்கு சிறப்பான முறையில் பயணம் தொடரும்.

இந்த ஆட்சியின் கீழ் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி வருகின்றது. எனவே, எதிரணிகள் வலுவாகச் செயற்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

53 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

57 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0