உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மலையக மக்களுக்கு முகவரி கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் ..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

முடிந்தால் போராளிகளின் பெயர்களால் இரத்தினபுரியிலும், பதுளையிலும் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து காட்டுங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் தொடர்பாக எழுந்த சர்ச்சையையடுத்து இன்று(24.1.2026) ஹற்றனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் தாங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு தாங்களுக்குள்ளேயே பதிலளித்த ஒரு வேடிக்கையான விடயம் காணக்கூடியதாக இருந்தது.இந்த நாட்டிலே பல சேவை செய்த தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் பெயரிலே மன்றங்கள் இருக்கின்றன.இது ஒரு வழமையான பழைமையான விடயம்.அது இந்த நாட்டில் மற்றுமல்ல உலகலாவிய ரீதியில் அது இருக்கின்றது.

மலையகத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் என்பவர் இந்த மக்களுக்கு முகவரி கொடுத்தவர் உரிமையை மீட்டவர்,பல போராட்டங்களை நடத்தியவர் அவ்வாறான அவரின் பெரும் சேவையினை மதித்து தான் இந்த நாட்டின் பழைய நாடாளுமன்ற கட்டட தொகுதியிலே அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.மலையகத்திலே தலைமை போராளி சௌமிய மூர்த்தி தொண்டமான்.மலையகத்தில் பல போராட்டங்களை நடத்தி மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான்.

நீங்கள் எல்லா போராளிகளின் பெயர்களிலும் மன்றங்களை அமையுங்கள்.பல பல நிறுவனங்களை உருவாக்குங்கள் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தைப் போல் பல தொழிற்பயிற்சி நிலையத்தை உருவாக்குங்கள்.இரத்தினபுரி கண்டி பதுளை போன்ற இடங்களில் உருவாக்குங்கள் போராளிகளின் பெயர்களை வையுங்கள்.அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

53 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

57 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0