உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நகரசபை தலையீட்டில் சவுத் பார் கடலில் அனுமதி இல்லாத பரிசோதனை பணிகள் நிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மன்னார் சவுத் பார் கடல் பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மதியம் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணி, மீனவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மன்னார் நகர சபைத் தலைவர் தலையீட்டுடன் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், குறித்த கட்டுமானப் பணியை மேற்கொண்ட குழுவினர் அப்பகுதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


கரைவலைத் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மன்னார் சவுத் பார் கடல் பகுதியில் இன்று குறித்த கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பனங்கட்டு கொட்டு மீனவர் சங்கத் தலைவர், பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட குழுவினரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதற்கு பதிலளித்த குறித்த குழுவினர், குறித்த பகுதி தனியார் காணிஎனவும், கடல் நீர் பரிசோதனை நடவடிக்கைக்காகவே இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், கட்டுமானப் பணி மீனவர்களின் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, மீனவர்கள் உடனடியாக அந்தப் பணியை நிறுத்துமாறு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நகர சபைத் தவிசாளர், குறித்த கட்டுமானப் பணியை பார்வையிட்டதுடன், குழுவினரின் ஆவணங்களையும் பரிசீலித்துள்ளார். நகர சபையிடமிருந்து எவ்வித அனுமதியும் பெறப்படாமல் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதியாகியதை அடுத்து, பணிகளை உடனடியாக நிறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், உரிய அனுமதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் திங்கட்கிழமை (26) மன்னார் நகர சபைக்கு வருகை தந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதுவரை எந்தவொரு கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், உரிய அனுமதி இன்றிப் பொதுமக்களை குழப்பும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் மன்னார் நகர சபைத் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

53 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

57 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0