பாரஊர்தியும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து-பாரஊர்தி சாரதி தப்பியோட்டம்.!
மட்டக்களப்பு நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், கோழிகளை ஏற்றிச் சென்ற பார ஊர்தியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர் பலத்த காயமடைந்து உடனடியாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சம்பவத்துக்குப் பிறகு பார ஊர்தி சம்பவ இடத்திலேயே கைவிட்டு, சாரதி தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
