உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சற்று முன் போக்குவரத்து பொலிஸாரை மோதி தள்ளிய வாகனம் மடக்கி பிடிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் இன்று (24) இடம்பெற்ற சம்பவமொன்றில், பொலிஸாரை மோதி தள்ளிய சிறிய சரக்கு வாகனம் மற்றும் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கட்டளையை மீறி பயணித்த சிறிய சரக்கு வாகனமொன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவர் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றபோதே, வாகனத்தின் சாரதி திட்டமிட்டு பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது, பொலிஸ் அதிகாரிகள் இருவரும் இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு வீதியின் ஓரத்தில் விழுந்துள்ளனர். அதேவேளை, இரு சக்கர வாகனம் சரக்கு வாகனத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சி, பின்னால் வந்த வாகனமொன்றில் இருந்த நபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையே, பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றபோது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

43 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0