உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இரு சக்கர வாகனங்கள் மோதி கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து கேகாலை – அவிசாவளை பிரதான வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கேகாலை திசையிலிருந்து பயணித்த இரு சக்கர வாகனமும், அவிசாவளை திசையிலிருந்து வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த இருவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளார்.வெளிநாடு செல்வதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

0 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

47 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

53 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

57 0 0