உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

திருகோணமலை கோமரங்கடவல -அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது இன்றையதினம் (22.1.2026) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.எட்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

போதையற்ற நாடாக முப்படையினர் செயற்பட்டு வரும் நிலையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் இப்படியான ஒரு கீழ்த்தரமான வேலையை செய்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சிவில் சமூக அமைப்பின் பிரதானியொருவர் எமது ஊடகப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0