உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இந்தியக் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்க நாமல் எம்.பி. தலைமையில் ‘மொட்டு’ ஒடிசா பயணம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஒடிசாவுக்கு விஜயம் மேற்கொள்கின்றது.

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியக் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்பதற்கு, இந்திய அரசாங்கம், இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று மொட்டுக் கட்சியின் உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, இந்திக அனுருத்த, சஞ்சீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோரள மற்றும் மிலிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரே இந்தியா செல்லவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, உலகின் முன்னணி பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒடிசா பேரிடர் முகாமைத்துவ மையத்துக்கும் இந்தக் குழு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

அசோக மன்னர் காலத்தைச் சேர்ந்த பௌத்த தொல்பொருள்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தப் பயணத்துக்கு முன்னதாக, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை, அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

27 0 0